News October 31, 2025

சேலம் வழியாக சிறப்பு ரெயில்!

image

ரயில்வே நிர்வாகம், பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. இந்த ரயில் (05271) இன்று (வெள்ளிக்கிழமை) பரவுனியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 2-ந் தேதி இரவு 8.18 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

Similar News

News October 31, 2025

சேலத்தில் வேலை உடனே விண்ணப்பீங்க!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சேலத்தில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://nabfins.org/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

சேலத்தில்: தந்தை 2ம் திருமணம் மகன் தற்கொலை!

image

சேலம், அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த மணிகண்டன் (21), நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.20 ஆண்டுகளுக்கு முன் இவரது தாய் சுசீலா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த தந்தை முத்துமணி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் மணிகண்டன் மனவேதனை அடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 31, 2025

சங்ககிரியில் சிறுத்தை நடமாட்டமா? பீதியில் மக்கள்!

image

சங்ககிரி: ஒலக்கச்சின்னானுார், ஒருக்காமலை பகுதியில் அதிகளவில் மரங்கள் அடர்ந்துள்ளதால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் ஒருக்காமலை அருகே,நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை சென்றதாக, அப்பகுதி மக்கள் இடையே தகவல் பரவியது. இதுகுறித்து வனவர் ரமேஸ் கூறுகையில், சிறுத்தை காலடி தடம் எதுவும் பதியவில்லை.மக்கள் புகாரால், வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.

error: Content is protected !!