News December 23, 2024
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாளை (டிச.23) பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நார்த்துக்கும், மறுமார்க்கத்தில், டிச.24- ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து, பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06507/ 06508) இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்; முன்பதிவு தொடங்கியுள்ளது.
Similar News
News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
News September 3, 2025
சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
News September 3, 2025
சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.