News November 11, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை மண்டலப் பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நரசப்பூர்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (07105/07106] தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவ.16 முதல் ஜன.18 வரை நரசப்பூரில் இருந்து கொல்லத்திற்கும், வரும் நவ.18 முதல் ஜன.20 வரை கொல்லத்தில் இருந்து நரசப்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
Similar News
News November 11, 2025
சார்லப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை சீசனை முன்னிட்டு சார்லப்பள்ளி-கொல்லம்-சார்லப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (07107/07108) இயக்கப்படுகின்றன. வரும் நவ.17 முதல் ஜன.19 வரை சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.19 முதல் ஜன.21 வரை கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்1. மாநகரப் பகுதியில் ஆதிசேஷ பெருமாள் கோவில் ரெட்டியூர் 2. நரசிங்கபுரம் நகராட்சி வார்டு 14, 15க்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 3. பூலாம்பட்டி பேரூராட்சி 9, 10, 11, 12, 13, 14, 15, மேம்பாறை சமுதாய கூடம் 4.ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை, வீரபாண்டி அக்கர பாளையம் 5.மேச்சேரி கூணான்டியூர் பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
News November 10, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.10) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


