News March 28, 2025
சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்கள்

வரும் ஏப்.09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஏப்.10, 17, 24, மே 01 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (01005/01006) இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மார்ச் 30- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கும்.
Similar News
News March 31, 2025
சேலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தேதி அறிவிப்பு

சேலம்: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அரசு அனுமதி பெற்று வரும் ஏப்.5ல் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ( SHARE பண்ணுங்க)
News March 30, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (30.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News March 30, 2025
சேலம் மாவட்டத்தில் இன்று பதிவான வெப்பநிலை

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்பநிலை சதத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 30) சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் முதியவர்கள் கடும் சிரம்மமடைந்துள்ளனர்.