News April 10, 2025

சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

தமிழ் புத்தாண்டு, விஷு, புனிதவெள்ளியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06089/ 06090) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 18, 2025

சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 17, 2025

சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

image

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.

News April 17, 2025

ஏற்காடு, பூலாம்பட்டிக்கு ஜாக்பாட்! ₹20 கோடியில் புதிய வசதிகள்!

image

சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு,  பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.

error: Content is protected !!