News August 29, 2025
சேலம் வந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்!

சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தலைமைச் செயலாளரின் உத்தரவின் படி, சேலம் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து 200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 600 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அனைத்து கட்சியினர் முன்பு வாக்குப்பதிவு பாதுகாப்பு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
Similar News
News August 29, 2025
சேலம்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. APPLY NOW!

சேலம் மக்களே, Oil India Limited காலியாக உள்ள 100 Senior Officer, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 29, 2025
விறுவிறுப்பாக நடந்த நீச்சல் போட்டிகள்!

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதன் முறையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளத்தில் இன்று (ஆக.29) பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
News August 29, 2025
வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழுத்தலைவர் மற்றும் சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (ஆக-29) நடைபெற்றது. உடன் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.