News March 10, 2025
சேலம் வந்த பிரபல இயக்குனர்

சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Similar News
News March 10, 2025
3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு அமர்ந்து தர்ணாவில் இன்று ஈடுபட்டார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அருகில் வசிக்கும் நபர் ஒருவர் மது குடித்து வந்து தினமும் தொல்லை செய்கிறார். தனியாக வாழும் எனக்கு பாதுகாப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்
News March 10, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (மார்ச் 11) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் தாமதமாக நாளை மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 10, 2025
சேலத்தில் பீர் விற்பனை 40% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் 100 பாரன்ஹீட் வெப்பம் வெயில் சுட்டெரித்து வருகிறது கடந்த சில நாட்களாக விஸ்கி பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது டாஸ்மார்க் விற்பனையாளர் கூறுகையில் 200 டாஸ்மார்க் கடைகள் நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது தற்போது வெயிலின் தாக்கத்தால் உயிர் விற்பனை 40 சதவீதம் கூடியுள்ளது என தெரிவித்தார்