News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
Similar News
News September 4, 2025
சேலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்? உஷார் மக்களே!

சேலம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சீதோஷன நிலை மாற்றம் காரணமாக சிலருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 4, 2025
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் பணி!

108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு 102,155377 வாகனங்களில் ஓட்டுநர்கள் வேலை மற்றும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை பி எம் எஸ் எஸ் ஒய் ஹால், (PMSSY HALL) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் அறிய 8925941586, 8925941578 எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
News September 4, 2025
15 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!

இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 15 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.