News April 2, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

ஏப்.02,08,10,20,22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190), ஏப்.12,13,14,15,17,18,19,20,21 ஆகிய தேதிகளில் ஆழபுலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

Similar News

News November 4, 2025

சேலம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மற்றும் அறியாத மின்னஞ்சல் இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய மோசடிகளை தவிர்க்க விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News November 3, 2025

சேலம்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <>இங்கு கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

முதலமைச்சரை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்!

image

இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் வந்த தமிழக முதலமைச்சருக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். மேலும் அதன் பின்னர் சாலை மார்க்கமாக சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு புறப்பட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!