News January 7, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சேலம், காட்பாடி வழியாக இயக்கப்படும் கோவை- கயா (03680) சிறப்பு ரயில் இன்று (ஜன.07) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 05.20 மணி நேரம் தாமதமாக இன்று நண்பகல் 01.10 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News November 14, 2025
சேலம்: அரசு தேர்வுக்கு சிறப்பு பேருந்துகள் ஆட்சியர்!

சேலம் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, மற்றும் வாழப்பாடி ஆகிய பகுதிகளில் வருகின்ற நவ.16ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
சேலம்: பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறிஞர் அண்ணா பிறந்தநாள் ஒட்டி நவம்பர்-19ஆம் தேதி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளதாகவும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கு பெற்று சான்றிதலுடன் பரிசு தொகையையும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 14, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு நாளை (நவ.15) பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், நாளை மறுநாள் (நவ.16) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கும் சிறப்பு ரயில்கள் (06543/06544) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


