News August 12, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் நாளை (ஆக.12) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 08.25 மணிநேரம் தாமதம் காரணமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 11, 2025
சுயமரியாதை திருமண நிலையத்தில் திருமணம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான இலக்கியா ஸ்ரீ-க்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருநம்பியான கார்த்திக் என்பவருக்கும், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. அங்கிருந்தவர்கள் திருமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
News August 11, 2025
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ல் கிராம சபை கூட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களை மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.