News August 8, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

வரும் ஆக.10- ஆம் தேதி அன்று சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையம் செல்லாது. மாறாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும், என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

சேலம் மாவட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

image

சேலம் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வருகின்ற 21,22 ஆகிய இரு நாட்கள் சமர்ப்பிக்க வேண்டும். 23ஆம் தேதி வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் என்றும் 25ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

சேலம்: ரூ.21 கோடி கல்விக்கடன் ஆட்சியர் தகவல்!

image

சேலத்தில் 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 550 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் 6,600 நபர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டு ஜூன் 30 முடிய 1,378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்!

News August 18, 2025

3 கட்சிகள் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு

image

சேலம் அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, திரிணாமூல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக, உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!