News December 21, 2024
சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

ஓசூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு காரணமாக, கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிச.23, 24, 25, 27, 28, 31, ஜன.1, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 07.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்தும், பெங்களூரு கண்டோன்மெண்ட் – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிச.23,24,25,27,28,31, ஜன.1,4,5,6 ஆகிய தேதிகளில் மதியம் 02.20 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி!

சேலம்: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிகரிக்கப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ): ₹60 உயர்ந்து ₹928.50-க்கு விற்பனையாகிறது.வணிக சிலிண்டர் (19 கிலோ): ₹115 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது வியாபாரிகள் மத்தியில் கவலையடைந்துள்ளனர்.
News March 7, 2026
கெங்கவல்லியில் தட்டி தூக்கிய நிர்வாகி!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகி அண்ணாதுரை உடனிருந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கெங்கவல்லியில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக கட்சியில் இணைந்தவர்கள் உறுதி அளித்தனர்.
News March 7, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.6) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


