News February 1, 2026
சேலம்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <
Similar News
News February 1, 2026
BREAKING: சேலம் அருகே பயங்கர விபத்து

கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் தைப்பூச திருவிழாவிற்கு காவடி எடுத்துச் சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தளவாபாளையத்தை சேர்ந்த கவிஸ், பரத் ஆகிய இருவரையும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 1, 2026
சேலத்தில் அதிரடி மாற்றம்

சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் கவிதா சூரமங்கலத்தில் இருந்து, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இன்ஸ்பெக்டர் மனோன்மணி, அஸ்தம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News February 1, 2026
சேலம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

சேலத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் (28). இவர் நள்ளிரவில் சேலத்திலிருந்து பைக்கில் வந்தபோது எதிர்பாராதவிதமாகச் சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூர் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பலியானவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.


