News August 11, 2025

சேலம்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

image

சேலம் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News August 11, 2025

சேலம் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள்!

image

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07331/07332) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.14- ஆம் தேதி ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.15- ஆம் தேதி காரைக்குடியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News August 11, 2025

போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு

image

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் தலைமையில் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர் மாணவர்கள், அதனை ஏற்றுக் கொண்டனர். போதைப் பழகத்தால் ஏற்படும் உடல், மன, சமூக பாதிப்பு குறித்து மருத்துவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

News August 11, 2025

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு!

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இன்று ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொலி காட்சியின் வாயிலாக சென்னையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் பங்கேற்றார்.

error: Content is protected !!