News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 29, 2025
சேலம்: அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!

சேலம்: ஓமலூர் தொகுதியில் மூன்று முறை (1989, 1991, 2011) எம்.எல்.ஏ-வாக இருந்த பல்பாக்கி சி.கிருஷ்ணன், தவெக நிர்வாகி செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, பல்பாக்கி கிருஷ்ணனை அதிமுகவிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News December 29, 2025
தாரமங்கலத்தில் பயங்கரம்..துடிதுடித்து பலி!

சேலம்: தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டுப் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டம், ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும், பொது மக்களை இயற்கை இடர்பாடுகளில் பாதுகாக்கும் நோக்கில் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மாவட்ட காவல்துறை மூலம் வெளியாகியுள்ளது. மக்கள் அவசர உதவி தேவையான போது எண்களை பயன்படுத்தலாம்.


