News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News January 31, 2026
ஆத்தூர் அருகே பயங்கரம்: இளைஞர் பலி!

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் தாமோதரன் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி கொத்தம்பாடியிலிருந்து ஆத்தூருக்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, டூவீலர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
சேலம்: சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை!

அரியானா மாநிலம் பிணங்குவான் பகுதியில் உள்ள நகைக்கடையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யாசிங் (எ) பரத் மற்றும் ராஜன்பாபு ஆகிய இரு பவாரியா கொள்ளையர்கள் சேலத்தில் பிடிபட்டனர்.பனமரத்துப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தச்சு வேலை செய்பவர்கள் போல பதுங்கியிருந்த இவர்களை, அரியானா மற்றும் சேலம் தனிப்படை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்
News January 31, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


