News October 19, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News October 19, 2025
சேலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

சேலம் நவம்பட்டி செக்கனுர் பாலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேட்டூர் காவல் நிலையத்தில் இருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சோதனையிட்டனர். முழுவதும் அழுகி இருந்ததால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தானாக இறந்தாரா இல்லை அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 19, 2025
மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி! சீமான் அறிவிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், மறைந்த வீரப்பனின் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக, சீமான் அறிவித்துள்ளார்.
News October 18, 2025
சேலம்: அனுமதி பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடக்க வேண்டும்

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள உத்தரவில்; சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், போராட்டங்கள் நடத்துவது ,உண்ணாவிரதம் மேற்கொள்வது, விழிப்புணர்ச்சி நிகழ்த்துவது நடத்துவதோ, ஐந்து நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.