News January 3, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.

Similar News

News January 31, 2026

தாரமங்கலம் அருகே நேர்ந்த சோகம்!

image

தாரமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மகாதேவன் (43), வீடு கட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மாநில அரசின் ‘104’ உதவி எண் அல்லது ‘044-24640050’ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

News January 31, 2026

ஆத்தூர் அருகே பயங்கரம்: இளைஞர் பலி!

image

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் தாமோதரன் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி கொத்தம்பாடியிலிருந்து ஆத்தூருக்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, டூவீலர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

சேலம்: சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை!

image

அரியானா மாநிலம் பிணங்குவான் பகுதியில் உள்ள நகைக்கடையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யாசிங் (எ) பரத் மற்றும் ராஜன்பாபு ஆகிய இரு பவாரியா கொள்ளையர்கள் சேலத்தில் பிடிபட்டனர்.பனமரத்துப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தச்சு வேலை செய்பவர்கள் போல பதுங்கியிருந்த இவர்களை, அரியானா மற்றும் சேலம் தனிப்படை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்

error: Content is protected !!