News December 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டம், ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும், பொது மக்களை இயற்கை இடர்பாடுகளில் பாதுகாக்கும் நோக்கில் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மாவட்ட காவல்துறை மூலம் வெளியாகியுள்ளது. மக்கள் அவசர உதவி தேவையான போது எண்களை பயன்படுத்தலாம்.
Similar News
News January 1, 2026
JUST IN: ஆத்துார் பெண் சம்பவ இடத்திலேயே பலி!

ஆத்துார் மல்லியக்கரையை சேர்ந்த மஞ்சுளா (45) வாய் பேச முடியாதவர். இந்தநிலையில் மஞ்சுளா தனது உறவினர்களுடன் நேற்று நள்ளிரவு மேட்டூர் சாலையில் ஆட்டோ சென்றுக்கொண்டு இருக்கும் போது எதிர்பாரதவிதமாக தனியார் ஆம்னி பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 1, 2026
சேலத்தில் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<
News January 1, 2026
நாய்களின் கூடாரமாகிறதா சேலம்? மாநில அளவில் 2-ம் இடம்

சேலம் மாவட்டத்தில் கடந்த தகவலின்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை 41,837 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அளவில் நாய்க்கடி பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


