News March 29, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.29 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News April 4, 2025

சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

image

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

News April 4, 2025

சேலம் மாவட்டம் உருவான தினம்!

image

இன்று (ஏப்ரல் 04) சேலம் மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம், இன்று 234-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் எழில்மிகு ஏற்காடு, சேகோ ஜவ்வரிசி, சேலத்து மாம்பழம், கோட்டை மாரியம்மன் கோயில், கஞ்சமலை, சங்ககிரி கோட்டை, சேலம் வெண்பட்டு, உள்ளிட்டவை சேலம் மாவட்டத்தின் வரலாற்றை பறை சாற்றுகின்றன.

News April 4, 2025

தமிழில் பெயர் பலகை- ஆட்சியர் வேண்டுகோள்!

image

மே 15- க்குள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம்.தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக சங்கங்கள்,உணவு நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் வேண்டுகோள்

error: Content is protected !!