News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
எஸ்ஐஆர் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் எஸ்ஐஆர் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில், நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வருகின்ற நான்காம் தேதி வரை கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, பெறும் பணி நிறைவு பெற உள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
News November 28, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை

சேலம் காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: செய்தி, ஆன்லைன் கடன் ஆப்களில் அதிகரித்து வரும் மோசடிகளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவித்துள்ளது. அறியாத பயன்பாடுகள் மூலம் கடன் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள், அடையாள ஆவணங்கள், வங்கி விவரங்களை பகிர்வது பெரிய அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. மேலும் இது குறித்து தகவல் அளிக்க 1930 தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
சேலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திறனறிவு தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், விஞ்ஞான துளிர் அறிவியல் மாத இதழுக்கு மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வு சேலம் மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களில் துவக்க நிலை பிரிவில் 712 மாணவர்களும், நடுநிலை 1,449 பேர், உயர்நிலை பிரிவில் 270 பேர், மேல்நிலை பிரிவில் 85 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது.


