News March 22, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ஜூலை 10,11,12,13 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு-மைசூரு ரயில் (16316),கன்னியாகுமரி-திப்ரூகர் தினசரி ரயில்(22503),ஜூலை 12-ல் கன்னியாகுமரி-ஸ்ரீ வைஷ்ணவ் தேவி வாராந்திர ரயில் (16317),ஜூலை 13-ல் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ்(22669),எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
News July 9, 2025
விண்ணப்பித்த உடன் குடிநீர் இணைப்பு!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி வந்த நிலையில், நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இனி விண்ணப்பித்தவுடன் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை 10 தவணைகளாக செலுத்தலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இனி தப்ப முடியாது: வாக்குமூலம் பதிவு செய்ய கேமரா!

சேலம் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சேலம் தனியார் நிறுவனம் சார்பில் 2 வீடியோ கேமராக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தனியார் நிறுவன ஊழியர்கள் உடனிருந்தனர்.