News March 25, 2024

சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 101.2 டிகிரி பதிவாகியுள்ளது

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 25) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Similar News

News October 27, 2025

மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்?

image

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகளுக்கான பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினர். தங்கள் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் இல்லை என்றும், இந்த நிலையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும், இந்த உத்தரவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

News October 27, 2025

சேலம்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

JUST IN: ஓமலூர் அருகே விபத்து; இருவர் பலி!

image

தொப்பூர் கேண்டீன் அருகே இன்று காலை சுமார் 7 மணியளவில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்கள் சொந்த ஊர் காடையாம்பட்டி என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் விரைந்து வந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!