News January 11, 2025

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு வேலை

image

தொட்டில் குழந்தை திட்டத்தின் உள்ள 5 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8, 12, நர்சிங் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, 4 ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம்-636001 என்ற முகவரிக்கு 31.01.2025 தேதிக்குள் நேரில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

சேலத்தில் இருந்து ஜெருசலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியகிறிஸ்தவர்களுக்கான மானிய தொகை நேரடியாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 28-02-2026ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News November 14, 2025

சேலம்: அரசு தேர்வுக்கு சிறப்பு பேருந்துகள் ஆட்சியர்!

image

சேலம் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, மற்றும் வாழப்பாடி ஆகிய பகுதிகளில் வருகின்ற நவ.16ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

சேலம்: பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி!

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறிஞர் அண்ணா பிறந்தநாள் ஒட்டி நவம்பர்-19ஆம் தேதி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளதாகவும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கு பெற்று சான்றிதலுடன் பரிசு தொகையையும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!