News August 12, 2025
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் ஆகஸ்ட் 12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்
▶️ காலை 9 மணி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம், இரும்பாலைரோடு தனியார் மண்டபம்.
▶️காலை 10:30 மணி தாயுமானவர் திட்டம் துவக்க விழா கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு.
▶️ காலை 10 மணி வீராணம் கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் ஸ்டாலின் முகாம்.
Similar News
News August 12, 2025
சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.12) கொச்சினுக்கு இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
இன்று அரசு முகாம் மனு கொடுக்க தயாரா!

சேலத்தில் இன்று 12ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்;
▶️வீராணம் – கோவிந்தக்கவுண்டர் சுசீலா திருமண மண்டபம் வீராணம். ▶️தாரமங்கலம் – சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் மற்றும் நெசவிளக்கு கிராம ஊராட்சி வள மைய கட்டிடம்.
▶️ காடையாம்பட்டி – வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மகாலட்சுமி நகர் மற்றும் கொங்குபட்டி கௌரநாயுடு சமுதாயக்கூடம்.
News August 12, 2025
சேலம் அருகே பள்ளி வாகனம் விபத்து!

சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூர் அடுத்த தண்ணித்தொட்டி பிரிவு சாலை அருகே, இன்று காலை அரசு விரைவு பேருந்தும் தனியார் பள்ளி வாகனமும் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனம் சற்று சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.