News January 10, 2025
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் இன்றைய (ஜன.10) முக்கிய நிகழ்வுகள் 1.அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு. 2. காலை 9 மணி ஜெயராணி கலைக்கல்லூரியில் கலை விழா. 3.10 மணி முதல் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையினர் கருப்பு பேட்ச் அணிந்து பணி. 4. 1.30 மணி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்.
Similar News
News January 21, 2026
சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 21, 2026
சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
வாழப்பாடி அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் துன்புறுத்திய கட்டுமான பணியாளர் மணி என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரைக் கைது செய்தனர்.


