News April 27, 2024
சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

சேலத்தில் நேற்று (ஏப்.26) 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று சேலம் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 3, 2026
சேலம் காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் OTP உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மோசடி ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News March 3, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (02.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


