News March 3, 2025
சேலம் மார்ச் 3 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மார்ச் 3 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ▶️காலை 10:30 மணி பாரத வெண்புறா மக்கள் சேவை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம். ▶️11 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ காலை 11:30 மணி ஜெய் ஜவான் ஜெய் கிஷான் மஸ்தார் பெடரேஷன் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 5 மணி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்
Similar News
News March 3, 2025
சேலத்தில் +2 தேர்வில் 99.22% தேர்வு எழுதினர்

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தேர்வில் 151 மையங்களில் பயிலும் மாணவர்கள் 37,161 மற்றும் தனித் தேர்வுகள் 213 என மொத்தம் 37,374 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் இன்றைய தமிழ் தேர்வில் 36,903 பள்ளி மாணாக்கர்களும், 180 தனித்தேர்வர்கள் என 37,083 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது சதவீதத்தில் 99.22 ஆகும்.
News March 3, 2025
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12672) ஆகிய ரயில்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News March 3, 2025
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வரும் மார்ச்.7ல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான் பதவி உயர்வு வழங்க முடியும் என பதிவாளர் கடிதம் எழுதியிருந்த நிலையில், ஆஜராக உத்தரவு. பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர் பணி உயர்வுக்கோரி 2013ல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.