News August 25, 2025
சேலம் மாநகர காவல் துறைக்கு புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் துறைக்கு அவசர அழைப்புகளுக்கு மக்களுக்கு உதவி செய்வதற்காக, புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் ஒன்பது இருசக்கர வாகனங்கள் ஐந்து என மொத்தம் 14 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை துணைக் காவல் ஆணையாளர்கள் சிவராமன் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்தர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மக்களுக்கான அவசர உதவிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய உத்தரவிட்டனர்.
Similar News
News August 26, 2025
அரசு கண்காட்சி 17 நாட்கள் 30,000 பார்வையாளர்கள்!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்டத்தில் 25.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; சேலம் டவுன் D. பழனியம்மாள் (94981-67715), அன்னதானப்பட்டி பழனி (94981-84845), கொண்டலாம்பட்டி சின்ன தங்கம் (94981-68290), அம்மாபேட்டை நந்தகுமார் (94981-02546) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.