News August 24, 2025
சேலம் மாநகர காவல்துறை அறிவிப்பு!

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக Dash-Cam பொருத்துவது மிகவும் அவசியம். இது விபத்து நேரங்களில் ஆதாரமாகவும், குற்றச்செயல்களை தடுக்கவும், சாலை விதிமுறைகள் மீறப்படுவதை கண்டறியவும் உதவும். தங்கள் மற்றும் பிறர் உயிர் பாதுகாப்பிற்காக உங்கள் வாகனத்தில் Dash-Cam பொருத்துங்கள் என சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 24, 2025
சேலத்தில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 24, 2025
சார் பதிவாளர், துணை தாசில்தார் மீது மோசடி வழக்கு!

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை தாசில்தார், விஏஓ உள்ளிட்ட 10 பேர் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடங்கணசாலை அருகேயுள்ள மெய்யனூரைச் சேர்ந்த கோவிந்தன் (73) எஸ்.பி. கௌதம் கோயலிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் விசாரணை நடைபெறுகிறது.
News August 24, 2025
சேலம்: தேர்வில்லாமல் ரூ.70,000 சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <