News January 24, 2025
சேலம் மாநகரில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாநகரில்இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி ராஜஸ்தானி சங்கம் சார்பில் சங்க கட்டடத்தில் அக்குபஞ்சர் பரிசோதனை சிகிச்சை முகாம்., 2) காலை 10 மணி கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி புதிய வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைப்பு, 3) காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரி என் எஸ் எஸ் மாணவிகள் துப்புரவு முகாம் 4) மாலை 6 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.
Similar News
News August 14, 2025
ஹைதராபாத் சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் கொல்லம்- ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (07193/07194) வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹைதராபாத்-கொல்லம் ரயில் ஆக.16 முதல் அக்.11 வரையும், கொல்லம்-ஹைதராபாத் ரயில் ஆக.18 முதல் அக்.13 வரையும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தி கொள்ள சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
News August 14, 2025
சேலத்தில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம், அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சேலம்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணபிக்க <
News August 14, 2025
70% மானியம் அறிவித்தார் சேலம் கலெக்டர்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.