News March 8, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (08.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
Similar News
News March 9, 2025
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு!

சேலம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,912 வழக்குகளில் தீர்வுக் காண்ப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 48.36 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
News March 9, 2025
திருமண தடை நீங்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில்

சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
News March 9, 2025
சேலத்தில் பெண்ணை கேலி, கிண்டல் செய்த வாலிபர் கைது

சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் பெண் ஒருவரை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.