News November 7, 2024
சேலம்: மாதம் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். சேலம் ஏற்காட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.
Similar News
News November 19, 2024
சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.