News April 24, 2024
சேலம் மண்டலத்தில் ரூ.54 கோடிக்கு மது விற்பனை

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 17,18,19 என தொடர்ந்து 3 நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, 20ம் தேதியான சனிக்கிழமை அன்று கடைகள் திறக்கப்பட்டன. 3 நாள் விடுமுறை அடுத்து கடை திறந்ததால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 20ம் தேதி ஒரே நாளில் ரூ.54 கோடியே 88 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
Similar News
News August 20, 2025
துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 57 துணை கலெக்டர்களைப் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். சேலம் மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இளநிலை நிர்வாக அலுவலராக இருந்த மாறன், வேலூர் தனித்துணை கலெக்டராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சிவகங்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த ஆனந்தி, சேலம் வாணிப கழக சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
News August 20, 2025
சேலத்தில் 11,671 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு!

சேலம் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான 11,671 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை உரங்களையும், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்றுச் செல்லலாம். உரங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 94433-83304, 98427-92313 ஆகிய எண்களை அழைக்கலாம்.
News August 20, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.