News March 15, 2025
சேலம்: மக்கள் இனி தினமும் பறக்கலாம்

சேலம்: ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இங்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் ’அலையன்ஸ் ஏர்’ விமான நிறுவனம் குளிர் காலத் திட்டத்தில், சேலம் விமான நிலையத்திலிருந்து செவ்வாய், சனி தவிர்த்து பிற நாட்களில் கொச்சின் – சேலம் – பெங்களூரு மீண்டும் பெங்களூரு -சேலம் – கொச்சின் என வாரம் ஐந்து நாட்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது.
Similar News
News March 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (15.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
சேலத்தில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி!

சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியாளர்களுக்கு, புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படும். தங்கி பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
News March 15, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பு

யார்டில் தண்டவாளம் மாற்றியமைக்கும் பணி காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை (மார்ச் 16) போத்தனூர்- இருகூர் மார்க்கத்தில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.