News November 6, 2025

சேலம்: மக்களே உஷார்.. ரூ.50 லட்சம் மோசடி!

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். அதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பர்வீன் காதர் பாஷா, சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி, ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி, 6 மாதங்கள் ஆகியும் வேலையும் தரவில்லை, பணமும் தரவில்லை எனக்கூறி, பணத்தை மீட்டு தர மனு அளித்தனர்.

Similar News

News November 6, 2025

சேலம்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

image

சேலம் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 6, 2025

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 6, 2025

சேலத்தில் பதிவு செய்ய ‘கெடு’.. உடனே பண்ணுங்க!

image

சேலம்: மின்னணு முறையில் விவசாயிகளின் தரவு சேகரிக்கப்பட்டு, தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வேளாண், அதைசார்ந்த அனைத்து மானியங்களும் இதை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும். விடுபட்டவர்கள் ஆதார்,நில ஆவண நகல்,ஆதார் இணைத்த மொபைல் எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையம், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து எண் பெறலாம். வரும் 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

error: Content is protected !!