News October 24, 2025

சேலம் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தற்போது மாநிலம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வண்ணம் உள்ளது. இதனால் சேலத்தில் மழையின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டார். காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும், காய்கறிகளை அதிக அளவு உண்ண வேண்டும், தேவையான மருந்து பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும், மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 24, 2025

சேலத்தில் நாளை திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி!

image

சேலம் டவுன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருக்குறள் வாசிப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, பள்ளி, கல்லூரி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும், இதற்கான பயிற்சி முற்றிலும் இலவசம், மேலும் விவரங்களுக்கு 94430-89255 சேலம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

சேலம்: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூரில் வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி 26 ம் தேதி சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே போல் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு திருச்செந்தூரில் இருந்து சேலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News October 24, 2025

சேலம்: IRCTC-ல் வேலை – தேர்வு கிடையாது! APPLY NOW

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!