News August 5, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கோரி 44,247 விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 02.08.2025 வரை நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
சேலம்: தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு தகுதி வாய்ந்த நபர்கள் சுய விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 25-ம் தேதிக்குள் மண்டல தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
News August 5, 2025
சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 5, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த கட்டிடங்களில் உள்ள தேவாலயங்களை புதுப்பிப்பதற்கு அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலான தேவாலயங்களுக்கு ரூ.10 லட்சம், 15 ஆண்டுகள் – ரூ.15 லட்சம் மற்றும் 20 ஆண்டுகள்- ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.