News September 10, 2025
சேலம் போலீசார் செய்த தரமான சம்பவம்!

சேலம் அழகாபுரம் பாலம் அருகே நரிக்குறவர் பெண்ணின் 9 மாத பெண் குழந்தை கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நாமக்கலில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து குழந்தையை மீட்டு சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 11, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
News November 11, 2025
சேலம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
சேலம்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

சேலம் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


