News October 1, 2025

சேலம்: போலி ஆன்லைன் விளம்பரங்கள் எச்சரிக்கை!

image

சேலம் மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “MESA SALE”, “Limited Offer” போன்ற போலி விளம்பரங்கள் ஆன்லைன் தளங்களில் பரவி வருகின்றன. இவற்றை நம்பி பணம் செலுத்துவது நிதி இழப்புக்கு காரணமாகும். குடிமக்கள் எந்தவொரு விளம்பரத்தையும் சரிபார்த்து பின்னரே பரிவர்த்தனை செய்ய வேண்டும். மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930-ஐ அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

Similar News

News April 3, 2026

சேலம்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

சேலம் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in இணையதளம் <<>>மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

வீரகனூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சேலம் நாவலூரைச் சேர்ந்த வீரமணி (56), வீரகனூரிலிருந்து வீடு திரும்பியபோது வி.இராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சோகச் சம்பவம் குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 3, 2026

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியர்: யார்?

image

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் அ. அருண் தம்புராஜ், ஐ.ஏ.எஸ். 2012-இல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற இவர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும், மக்களுடன் எளிமையாகப் பழகுவதிலும் சிறந்தவர். கடலூரிலிருந்து இவர் மாற்றப்பட்டபோது, பொதுமக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தது இவரது மக்கள் பணிக்கான நற்சான்றாகும்.

error: Content is protected !!