News March 15, 2025
சேலம்: பெண்ணின் கழுத்தை அறுத்த EX காதலன்

சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் சின்ராஜ்,இவருடைய மனைவி வனிதா (23). இந்தநிலையில் வனிதாவிற்கு அவருடைய முன்னாள் காதலன் வேடராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டநிலையில், நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேடராஜ் , கத்தியால் வனிதா கழுத்தில் அறுத்துள்ளார்.இதன் பின்னர் தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை.
Similar News
News September 13, 2025
சேலம்: SBI வங்கியில் வேலை..APPLY NOW!

சேலம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 13, 2025
சேலம்: ஐந்து நாட்களில் பயனாளிகள் 7,782பயனடைந்தனர்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் சனிக்கிழமை தோறும் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 7,782 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 3,540ஆண்களும் 3,540 பெண்கள் என மொத்தம் 7,782 பயனடைந்துள்ளனர். 4580 பிஜி, 666 எக்ஸ்ரே, 863 அல்ட்ரா ஸ்கேன், செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு கடை ஏற்கனவே வைத்திருந்தவர்கள் புதிதாக வைக்க விரும்புவர்கள் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், IFHRMS இணையதளம் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.