News April 6, 2025
சேலம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

சேலம் : கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த ஒரு மாத கால இலவச பயிற்சி, தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 19 முதல் 45வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதில், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.09 ஆகும். இதுகுறித்த விவரங்களுக்கு 7550369295, 9566629044 ஆகிய எண்களை அணுகவும்.
Similar News
News April 7, 2025
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஏப்ரல்.7 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்)▶️காலை 10 மணி மாவட்ட இசை பள்ளி ஆண்டு விழா (ஐயப்பன் கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில்) ▶️காலை 9 மணி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு (அயோத்தியபட்டினம்) ▶️காலை 11 மணி இந்திய குடியரசு கட்சி செய்தியாளர் சந்திப்பு கூட்டம் (ஹோட்டல் சென்னிஸ்)
News April 6, 2025
மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

“மாணாக்கர்கள் சமூக வலைதளங்களை தங்களது ஆக்கப்பூர்மான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணாக்கர்கள் தங்களுக்கான விருப்பமுள்ள படிப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்குரிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்” என மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தல்!
News April 6, 2025
சேலம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.