News December 6, 2024
சேலம் புத்தகத் திருவிழா: வாசகர்களின் கவனத்திற்கு

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா, வரும் டிச.09-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தமிழ் வினைச்சொல், அகரமுதலி உள்பட 7 புத்தகங்கள் 35% சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
சேலம்: 7 மாத கர்ப்பிணி திடீர் சாவு – ஆர்டிஓ விசாரணை!

திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் இவரது மனைவி மதுமிதா 7 மாத கர்ப்பிணி ஆக உள்ளார். கடந்த 5 மாதங்களாக சங்ககிரியில் உள்ள மாமனார் வீட்டில் அனைவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மதுமிதாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். சங்ககிரி ஆர்டிஓ கேந்திரியா விசாரணை மேற்கொண்டனர்.
News September 16, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

பல்வேறு புகார்களுக்கு உள்ளான பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. மணி, ஆகிய 2 பேரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 2 எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.