News September 22, 2024
சேலம்: பில்லி சூனியம்..பரபரப்பு போஸ்டர்

ஓமலூர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல். இந்நிலையில் இவரது படத்தைக் கொண்டு சூனியம் செய்ய அணுகவும் என்று அடிக்கப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவியுள்ளது. இதனைதொடர்ந்து வெற்றிவேல் தரப்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஓமலூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
‘அய்யா கேட்டால் இங்கேயே உயிரை விடுவேன்’

திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், “என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கோ, பொறுப்புகளை மாற்றுவதற்கோ அதிகாரமிக்கவர் மருத்துவர்.அய்யா மட்டுமே. 36 ஆண்டுகளாக அவர் காலில் கிடக்குறேன். அருளு உன் உயிர் வேண்டும் என்று அய்யா கேட்டார், இப்போதே உங்கள் முன் கழுத்தை அறுத்து உயிரை விடுவேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
News July 8, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நங்கவள்ளி கோயில்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோயில் உள்ளது. இது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இங்கு நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். இதை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190) இன்றும் (ஜூலை 08), நாளையும் (ஜூலை 09) போத்தனூர்-கோவை-இருகூர் மார்க்கத்திலும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) இன்றும், நாளையும் கோவைக்கு செல்லாமல் போத்தனூர்-இருகூர் மார்க்கத்தின் வழியே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது எனவே இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளுமாறு வேண்டுகோள்!