News March 13, 2025

சேலம் பாஜக மண்டல மாநாடு தேதி அறிவிப்பு

image

சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar News

News March 14, 2025

சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமாக்கப்படும்

image

சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

image

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News March 14, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களை ஒட்டி வரும் 17ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக போக்குவரத்து கழகம் இணைய வழியாகவும் முன்பதிவு செய்து பயன் பெற போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!