News October 4, 2025

சேலம்: பயன்பாட்டுக்கு வந்த பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள்!

image

சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மொத்த 3,170 செல்போன் டவர்களில் 898 4ஜி டவர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

ஆயுள் சான்றிதழை தபால் அலுவலகம் மூலம் பெற வசதி!

image

தபால் துறை, தபால் கட்டண வங்கி ஆகியவை இணைந்து ஓய்வூ தியர்கள் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வ தற்கான முகாம் 31-ந்தேதி வரை தபால் அலுவலகங்களில் நடக்கிறது. இவ்வாறு பதிவு செய்யும் போது எந்த தபால் அலுவலகங்களிலும் ஆதார் அடிப்ப டையிலான சான்றிதழ்கள் எளிதில் பெறலாம். இந்த தகவல் சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

News November 9, 2025

சேலம்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க

News November 9, 2025

சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!