News October 19, 2025
சேலம்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News October 21, 2025
சேலம்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க
News October 21, 2025
சேலத்தில் விபத்து:தாய்மாமனுடன் மருமகன் பலி!

சேலம் சின்ன சீரகாபாடியை சேர்ந்த ராம்குமார் (25). கடந்த 19ம் தேதி தனது சகோதரி மகன் பவித்ரன் (6),மகள் புகழினி (7) ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் செல்லும் போது எதிரே வந்த பைக், நேருக்கு நேராக மோதியது. இதில் பவித்ரன் உயிரிழந்தநிலையில், ராம்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகழினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை!
News October 21, 2025
சேலத்தில் பட்டாசு வெடித்து 10 பேர் காயம்!

மேட்டூர் அருகே பாம்பம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டபானி மகன் மகிலன் (9). இவர் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வீட்டின் முன் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கண்ணில்பட்டு காயம் ஏற்பட்டது. அலறிய சிறுவனை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதே போல பெரமனுார், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.