News August 12, 2025

சேலம்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

image

சேலம் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal<<>>’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும்.(SHARE)

Similar News

News August 12, 2025

சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.12) கொச்சினுக்கு இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

இன்று அரசு முகாம் மனு கொடுக்க தயாரா!

image

சேலத்தில் இன்று 12ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்;
▶️வீராணம் – கோவிந்தக்கவுண்டர் சுசீலா திருமண மண்டபம் வீராணம். ▶️தாரமங்கலம் – சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் மற்றும் நெசவிளக்கு கிராம ஊராட்சி வள மைய கட்டிடம்.
▶️ காடையாம்பட்டி – வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மகாலட்சுமி நகர் மற்றும் கொங்குபட்டி கௌரநாயுடு சமுதாயக்கூடம்.

News August 12, 2025

சேலம் அருகே பள்ளி வாகனம் விபத்து!

image

சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூர் அடுத்த தண்ணித்தொட்டி பிரிவு சாலை அருகே, இன்று காலை அரசு விரைவு பேருந்தும் தனியார் பள்ளி வாகனமும் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனம் சற்று சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!