News April 18, 2025
சேலம்: பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!

சேலம் நாராயண நகரில் 3-வது கிராஸ் பகுதியில் இன்று (ஏப்ரல் 18) பட்டப்பகலில் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த வயதான தம்பதியை மிரட்டி 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
சேலத்தில் கடன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறவிண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வழங்குவதாகவும், மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.
News July 4, 2025
சேலம்: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் 0427 245 0241. ஷேர் பண்ணுங்க !
News July 4, 2025
சேலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

சேலம் மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்குட்பட்டோர் https://www.salem.nic.in விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், சேலம் மாவட்ட நலச்சங்கம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.